Wednesday, March 10, 2010

ஜிமெயில் காலை வாரினால் கூட ஜிமெயிலை சுலபமாக படிக்கலாம்


நண்பர்களே நம்முடைய கூகிள் ஜிமெயில் ஒரு இலவச சேவை
என்பது எல்லோருக்கும் தெரியும்.  திடீரென்று இந்த இலவச சேவையை  நிறுத்த கூகிளுக்கு
முழு அதிகாரம் உண்டு!!!!!  (நிறுத்தமாட்டார்கள் என்று நம்புவோம்.)  அப்படி
நிறுத்திவிட்டால் நாம் ஜிமெயில் வழியாக அனுப்பிய மெயில் அதன்வழியாக நமக்கு வந்த
மெயில் அட்டாச்மென்டுகள் கோப்புகள் இவைகள் அனைத்தும் போய் விடும்.  இதுமட்டுமா சில
நேரங்களில் ஜிமெயில் சர்வர் படுத்து விடும் அப்பொழுதும் இந்த தரவிறக்கி வைத்த
மெயில்கள் கைகொடுக்கும் உங்களுக்கு.  இது போல் ஒன்று நடந்தால் நிறைய பேர் தலை
வெடித்துவிடும். அதுமட்டுமல்லா உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் விழி
பிதுங்கிவிடும்  அதனால் இது நடக்ககூடாது என்று கூகிள் ஆண்டவரை பிரார்த்திப்போம்.  அப்படி நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது.  எப்பொழுதும் வரும்முன் காப்போம் நடவடிக்கை நல்லது.  இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில்
கணக்கில் உள்ள அஞ்சல்களை (அட்டாச்மென்ட் கோப்பு) உட்பட தரவிறக்கி கொடுத்து விடும்.   அதுவும் சாதாராண அவுட்லுக் கோப்புகள் வடிவத்தில். அதுவும் முற்றிலும்
இலவசமாக



முதலில் இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  சுட்டி

பின்னர் இந்த மென்பொருளை சாதாரண மென்பொருள்
நிறுவிக் கொள்ளுங்கள்

பிறகு நிறுவிய மென்பொருளை இயக்குங்கள்.

அதில் Gmail Login என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் மெயில் முகவரி கொடுக்கவும்


அதற்கு கீழே Gmail Password என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை
கொடுக்கவும்.

அதற்கு கீழே நீங்கள் உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேமிக்க
விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.

அதன் கீழே எந்த
தேதியிலிருந்து எந்த தேதி வரை வேண்டுமென்று தேர்வு செய்து கொண்டு Backup என்பதனை
கிளிக் செய்யுங்கள்.

தானாகவே நீங்கள் தேர்வு செய்த போல்டரில் உங்களுடைய
அஞ்சல்கள் தரவிறக்கமாகும்.


உங்கள் இணைய இணைப்பை பொறுத்து
அஞ்சல்
தரவிறக்கும்
வேகம் மாறுபடும்.


சில நேரங்கள் உங்கள் இணைய இணைப்பு
விட்டு போனால் பரவாயில்லை இணைய இணைப்பு வந்தவுடன் திரும்பவும் Backup கிளிக்
செய்டால் விட்ட இடத்தில் இருந்து தொடரும்.

இந்த மென்பொருள் முற்றிலும்
இலவசம் அதுமட்டுமில்லை மாதம் ஒருமுறை இந்த பொருள் இலவசமாக அப்டேட் செய்யப்படுகிறது.




கருத்துத் தெரிவிக்கவும்



ஹார்ட் டிஸ்க் உருவான பாதை

நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன. ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.

1956: ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.

1961: ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.

1961: பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.

1963: முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.

1966: புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.

1971: ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.

1973: நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.

1975: ஐ.பி.எம். 62 ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.

1976: 43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.

1976: ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.
1979: பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.

1979: ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.
1980: முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.

1981: சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.
1983: ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.

1986: அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.
1988: கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.

1992: ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.
1993: முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (
Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.
1996: மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.

1997: ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.

1999: மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.

2000: அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.
2002: பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.
2005: ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.
2006: நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய
Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.

2006: Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.
2007: முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.

2008: லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.
2009: வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.
2009: வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.

பகுப்புகள்: கம்ப்யூட்டர் செய்தி




தொகுப்பு - kulam


 

No comments:

Post a Comment