Wednesday, March 10, 2010

வாழ்த்துக்களை வீடியோவாக அனுப்ப…


வாழ்த்துக்களை வீடியோவாக அனுப்ப…

இமெயில், இணைய தள வாழ்த்து அட்டைகள், மொபைல் எஸ்.எம்.எஸ் என எந்தவித செலவும் இன்றி வாழ்த்துக்களை பண்டிகைக் காலங் களில் அனுப்புகிறோம். செலவு எதுவும் இல்லாததால், அல்லது குறைந்த செலவில் அனுப்ப முடிகிறது என்பதால் இவை குவிகின்றன.  இந்த வரிசையில் இப்போது வீடியோ கிளிப்புகளை வாழ்த்துக்களாக அனுப்பும் வசதி கிடைத்துள்ளது. யாரும் வீடியோ கிளிப்புகளை இணையத்தில் பதிந்து வைத்திட வசதி தந்த கூகுள் நிறுவனம் தன் இணைய தளத்தில் இந்த வசதியினைத் தந்துள்ளது. இதனை அனுப்புவதும் மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் கூகுள் யுட்யூப் தளம் செல்ல வும். உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய் திடுங்கள். உங்களுக்கு அக்கவுண்ட் இல்லை என்றால் ஒன்றை உருவாக்குங்கள். பின் http://www.youtube.com/greetings  என்ற முக வரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.  இந்த தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு பலவகையான வாழ்த்து வீடியோ கிளிப்புகள் தரப்பட்டிருக் கும். இதில் உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வீடியோ கிளிப் புகளைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக நீங்கள் எதிர்பார்த்தால் கீழாகச் சென்று எதிர்பார்க்கும் வீடியோக்களுக்கேற்ற சில சொற்களை அமைத்துத் தேடலாம். பின் கிடைக்கும் வீடியோ கிளிப்புகளில் ஒன் றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வீடியோ கிளிப் ஒன்றைத் தேர்ந்தெடுத்த வுடன் ஒரு பாப் அப் ஸ்கிரீன் கிடைக்கும். அதில் இந்த வீடியோவினை வாழ்த்தாக அனுப்ப கூடுதல் அம்சங்களை இணைக் கலாம். பேக் கிரவுண்ட் தீம் அமைக்கலாம். பெர்சனல் மெசேஜ் ஒன்றை டைப் செய் திடலாம். இவை எல்லாம் முடித்துவிட்டால் அனுப்ப வாழ்த்து ரெடியாகிவிடும். இதனை உங்கள் நண்பர் அல்லது உற வினர் ஒருவருக்கு அனுப்பலாம். அல்லது மொத்தமாக 25 பேர் வரை அனுப்பலாம்.  பிறகென்ன வீடியோக்களை அனுப்பி உங்கள் நண்பர்களையும் உறவினர் களையும் வாழ்த்துங்களேன். அவர்கள் சந்தோஷப் படுவார்கள்.

தொகுப்பு --
kulam


 

No comments:

Post a Comment