கருத்துத் தெரிவிக்கவும்
மீடியா பயர் ஆன் லைனில் எவ்வளவு பைல்களை வேண்டுமானாலும் பதிந்து வைத்துப் பயன்படுத்தும் வசதியினை அளிக்கிறது. அதுவும் இலவசமாக! இதனை தனிப்பட்ட உபயோகத்திற்கு மட்டுமின்றி உங்கள் நிறுவனங்களின் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.
www.mediafire.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு முதலில் செல்லுங்கள். இந்த தளத்தில் நுழைந்தவுடன் அதன் முகப்பு பக்கத்தின் நடுவில் ஒரு பட்டன் இருப்பதைக் காணலாம். அதில் "Upload files to MediaFire" என்று இருக்கும். அதில் கிளிக் செய்திடுங்கள். அப்போது திறக்கப்படும் பக்கத்தில் அடுத்தடுத்து மூன்று பட்டன்கள் தரப்படும். நீங்கள் காத்திட விரும்பும் பைல்களை இரண்டு வகைகளில் அப்லோட் செய்திடலாம். உங்களுக்கென ஓர் அக்கவுண்ட் திறந்து அப்லோட் செய்திடலாம். அல்லது எந்த அக்கவுண்ட்டும் இன்றி நேரடியாக பைல்களை அப்லோட் செய்திடலாம். அக்கவுண்ட் இல்லாமல் பைல்களை அப்லோட் செய்தால் அந்த பைல்களை நீங்கள் படிக்கலாம்; பார்க்கலாம். ஆனால் எடிட் செய்திட முடியாது. அவற்றை மீடியா பயர் தளத்திலிருந்தும் நீக்க முடியாது. இருப்பினும் இவ்வாறு மீடியா பயரில் சேவ் செய்திடும் பைலுக்கு உங்களுக்கென ஒரு லிங்க் தரப்படும். இதனைக் கிளிக் செய்து உங்கள் பைலை நீங்கள் பார்க்கலாம். உங்கள் நண்பர்களுக்கு அந்த லிங்க்கைக் கொடுத்து அவர்களையும் பார்க்குமாறு செய்திடலாம். பைல்களை மீடியா பயர் தளத்தில் ஏற்றிய பின்னர் எந்த நேரத்திலும் அந்த தளம் சென்று "MyFiles"பிரிவு சென்று நீங்கள் வைத்துள்ள பைல்களைப் பார்த்து படிக்கலாம்.
உங்களுக்கென தனி அக்கவுண்ட் திறப்பதுவும் மிகவும் எளிதுதான். மீடியா பயர் கேட்கும் உங்கள் மின்னஞ்சல் முகவரியினைத் தந்துவிட்டு ஏதேனும் ஒரு பாஸ்வேர்டைத் தர வேண்டும். உங்களுக்கென ஓர் அக்கவுண்ட் திறக்கப்படும். இனி உங்கள் பெர்சனல் அக்கவுண்ட் பயன்படுத்தி நீங்கள் பைல்களை மீடியா பயர் தளத்தில் பதிந்து, பதுக்கி வைக்கலாம்.
பைல்களை அப்லோட் செய்திட "Upload files to MediaFire" என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ போல ஒரு விண்டோ கொடுக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும் இந்த விண்டோ மூலம் பார்க்கலாம். நீங்கள் அப்லோட் செய்திட விரும்பும் அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடலாம். எத்தனை பைல்களை வேண்டுமானாலும் அப்லோட் செய்திடலாம். ஆனால் பைல் ஒன்றின் அளவு 2 ஜிபி க்கு மேல் இருக்கக் கூடாது.
பைல்களை செலக்ட் செய்தவுடன் "Upload" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். மீண்டும் விண்டோ ஒன்று புதியதாகத் திறக்கப்படும். இங்கு நீங்கள் மீடியா பயரில் பதிந்து வைக்கும் பைல்களுக்குப் புதியதாக ஒரு போல்டர் தயாரிக்கலாம். அல்லது அது தரும் மை பைல் என்ற போல்டரையே பயன்படுத்தலாம். எப்போது வேண்டுமானாலும் இந்த போல்டரில் உள்ள பைலை நீங்கள் பார்வையிடலாம். பைல் ஒன்று உங்களுக்கு மட்டுமான பிரைவேட் பைலா அல்லது உங்கள் நண்பர்களும் பார்க்கக் கூடியதான பப்ளிக் பைலா என்பதனையும் நீங்களே முடிவு செய்து அந்த அட்ரிபியூட்டை பைலுக்குக் கொடுக்கலாம்.
நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என எண்ணினால் உடனே மை அக்கவுண்ட் தேர்ந்தெடுத்தால் அங்கு அதற்கான வசதி கிடைக்கும். இங்கேயே உங்களுடைய முக்கியமான பைல்களுக்குமான பாஸ்வேர்டையும் உருவாக்கலாம். எங்கள் நிறுவன பைல்கள் எல்லாமே 4 ஜிபிக்கு மேலாகவே இருக்கின்றன. என்ன செய்யலாம்? என்று ஒரு சிலர் எண்ணலாம். மீடியா பயர் அதற்கும் வழி தருகிறது. கட்டணம் செலுத்தி அந்த வசதியைப் பெறலாம்.
No comments:
Post a Comment