கருத்துத் தெரிவிக்கவும்
வேர்ட் டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை உண்டாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான வழிகளை இங்கு காணலாம். வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் உள்ளன என்று பார்க்கலாம்.
1. அரபிக் எண்கள் – 1,2,3 ..
2. அரபிக் எண்கள் சிறிய
டேஷ் அடையாளத்துடன் –1, –2,–3 ..
3. அப்பர் கேஸ் ரோமன் I, II, III…
லோயர் கேஸ் ரோமன் i, ii, iii …
5. அப்பர் கேஸ் எழுத்துகள் A,B,C, …
6. லோயர் கேஸ் எழுத்துகள் a, b, c, …
இனி பார்மட்டினை மாற்றுவது குறித்துக் காணலாம்.
1. உங்கள் டாகுமெண்ட்டில் எந்த பகுதியில் உள்ள பக்க எண்களின் பார்மட்டை மாற்ற வேண்டுமோ அந்த பகுதியில் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. வியூ மெனுவிலிருந்து ஹெடர் அண்ட் புட்டர் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஹெடர் கட்டம் கிடைக்கும். கீழாக அதனை எடிட் செய்வதற்கான டூல் பார் கட்டம் கிடைக்கும். இதில், 3. பார்மட் பேஜ் நம்பர் ஐகானைக் கண்டறிந்து அதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய பாக்ஸில் பேஜ் நம்பர் பார்மட்டுகள் தரப்படும். அதில் தேவையான பார்மட்டைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
4. பின் ஓகே கிளிக் செய்திடவும்.
5. பின் ஹெடர் அண்ட் புட்டர் பாக்ஸிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட் சில தகவல்கள்
உடனடியாக ஒரு டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.
திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும்.
கீழ்க்காணும் செயல்களுக்கான கீகள் உங்களுக்குத் தெரிந்ததே:
செய்ததை நீக்க (Undo) – Ctrl +Z
தேர்ந்தெடுத்ததை நீக்க (Cut) – Ctrl +X
நகலெடுக்க (Copy) – Ctrl +C
எடுத்ததை ஒட்ட Ctrl +V
இந்தச் செயல்களை வேறு சில கீகளை அழுத்தியும் மேற் கொள்ளலாம். அவை:
Ctrl +Z = AltBackspace
Ctrl +X = ShiftDel
Ctrl +C = CtrlIns
Ctrl +V = ShiftIns
ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் செயலாற்றிக் கொண்டிருக்கையில் திரையில் தோன்றும் விண்டோவினை பின்னுக்குத் தள்ளி மற்றதை முன்னுக்குக் கொண்டு வர Alt+ ESC அழுத்தவும்.
வேர்டில் At மற்றும் Ln
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்களைக் கையாள்கையில் அதன் ஸ்டேட்டஸ் பாரில் At மற்றும் Ln என்ற இரண்டு குறியீடுகளைக் கண்டிருப்பீர்கள். இவை எதனைக் குறிக்கின்றன என்று லட்சியம் செய்யாம லேயே, ஏனென்றால் என்ன என்று புரியாததனால், நாம் அலட்சியப்படுத்தி வருகிறோம். இவற்றில் Ln என்பதை நாம் எளிதாக யோசிக்கலாம். இது Line என்பதன் சுருக்கம். அது கர்சர் இருக்கும் வரி எத்தனாவது வரி என்று காலியான வரிகளுடன் சேர்த்து எண்ணிக்கையைத் தருகிறது. At குறியீடு சற்று வித்தியாசமானது. இதன் அருகில் ஓர் அளவு, பெரும்பாலும் அங்குலத்தில் தரப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக At 3.8″ என இருக்கலாம். இதில் என்பது கர்சர் இருக்கும் வரி அந்த பக்கத்தின் மேல் புறத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று காட்டுகிறது. இதனைப் பெரும்பாலும் நாம் நம் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இந்த தூரத்தை அறிந்து கொள்வதன் மூலம் அந்த பக்கத்தின் இன்னும் எவ்வளவு இடம் கீழாக உள்ளது என அறிந்து கொள்ளலாம்.
பகுப்புகள்:
கம்ப்யூட்டர் செய்தி
தொகுப்பு --
kulam
No comments:
Post a Comment