Wednesday, March 10, 2010

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்


நண்பர்களே நீங்கள் ஜிமெயில்  அக்கவுண்ட் வைத்து இருந்தால் இது உங்களுக்கானது
நீங்கள் உங்கள் நண்பருக்கு திட்டி மெயில் அனுப்பிவிட்டு திரும்ப பெற அடுத்த விநாடி
நினைத்திர்கள் என்றால் அது முடியும் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து என்றால் முடியாது.
சரி அடுத்த விநாடி திரும்ப பெற வேண்டும் என்றால் நான் முதலில் கூறியது போன்றது  இது
முற்றிலும் ஜிமெயில் உபயோகிப்பவர்களுக்கு மட்டும். ஜிமெயில் நிர்வாகத்தினர்
இப்பொழுது நீங்கள் மின் அஞ்சல் அனுப்பிய ஐந்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும்
உரிமையை தந்திருக்கிறார்கள்



இதற்கு நீங்கள்
செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலதுபுறம் மேலே செட்டிங்ஸ்
கிளிக் செய்து அதில் Labs என்பதனை கிளிக் செய்யுங்கள்.

 

அதில் Undo Send என்பதை Enabled செய்து கீழே வந்து Save Changes கிளிக் செய்து வெளியேறுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு மேலே சொன்ன உரிமை கிடைக்கும்.


தொகுப்பு -- kulam

No comments:

Post a Comment