6,
நம் தமிழ் நாட்டில் இன்னும் மொபைல் இன்டர்நெட் அதிக புழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், நமது தளத்திற்கு மொபைல் வெர்ஷன் வெளியிடுவது எவ்வளவு சந்தோசமான விஷயம். அதுவும் சில எளிய வழிமுறைகள் மூலம்.
http://www.mobify.me தளத்திற்கு செல்லுங்கள்.
எளிய ரெஜிஸ்ட்ரேஷனுக்கு பிறகு வரும் விண்டோவில், உங்கள் தளத்தின் முகவரி கொடுங்கள்.
பின் லோட் ஆகும் உங்கள் தளத்தில், மொபைல் வெர்ஷனில் என்னென்ன தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.
அதன் பின் டிசைன் ஆப்ஷன் சென்று, பல்வேறு மொபைல் டிவைஸ்களில் உங்கள் தளம் எவ்வாறு தெரியும் என்பதைப்பாருங்கள். பின், ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் செய்து கொள்ளுங்கள்.
இறுதியாக லாஞ்ச என்பதை தேர்வு செய்யுங்கள். உங்கள் மொபைல் தளத்திற்கு ஒரு பெயர் கிடைக்கும்.
அதன் கீழே வரும் Code - ஐ காப்பி செய்து வழக்கம் போல உங்கள் ப்ளாகின் dashboard --> Edit HTML சென்று
<head>
என்பதற்கு மேலே பேஸ்ட் செய்யுங்கள். அவ்வளவுதான், உங்கள் மொபைலில் இனி உங்கள் தளத்தை பார்வையிடலாம்.
என் தளத்தை மொபைலில் பார்வையிட,
http://kanakalam.mobify.me
எனும் முகவரிக்கு செல்லுங்கள்.
தொகுப்பு -- kulam
No comments:
Post a Comment