Wednesday, March 10, 2010

தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance




விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி வலையமைப்பில்
அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியைத் தரும் Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில் ஏதும்
சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம் நேரில்
செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம்.

அதாவது கொழும்பிலோ
குருனாகாலிலோ வசிக்கும் நீங்கள் வெளிநாடொன்றில் இருக்கும் ஒரு நண்பரை அழைத்து அவர்
அங்கிருந்தே உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கும் வசதியை Remote Assistance தருகிறது.
இந்த வசதியைப் பெற உங்கள் கணினியிலும் இணைய
விரும்பும் கணினியிலும் இணைய இணைப்புடன் விண்டோஸ் எக்ஸ்பியும் (விஸ்டாவிலும்
மேம்படுத்தப்பட்ட ரீமோட் எஸிஸ்டன்ஸ் வசதி கிடைக்கிறது) நிறுவியிருத்தல் வேண்டும்.
அத்துடன் வின்டோஸ் லைவ் மெஸ்ஸெஞ்சரில் இணைவத்ற்கான ஒரு மின்னஞ்சல் முகவரியும்
அவசியம்.
நீங்கள் நண்பரை அழைத்ததும் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு கணினியுடன்
இணைப்பை ஏற்படுத்தியதும் உங்கள் கணினியின் டெஸ்க் டொப் திரையை அவரது கணினியில் காண
முடியும். அவருக்கு உங்கள் கணினியை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்படின்
அவரது கீபோர்டையும் மவுஸையும் உபயோகித்து உங்கள் கணினியை முழுமையாக அவரது கட்டுப்
பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக்
கையாளலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் Help and Support தெரிவு செய்யுங்கள்.
உதவி வேண்டுபவர் மட்டுமே இதனைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது Help and Support விண்டோ தோன்றும். அங்கு Ask For Assistance மெனுவின் கீழ் உள்ள Invite a Friend to connect to your computer with Remote Assistance என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் விண்டோவில் Invite someone to help you எனும் லிங்கில் க்ளிக்
செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் விண்டோவில் விண்டோஸ் மெஸ்ஸெஞ்சர் காட்டும்
பட்டியலிலிருந்து உதவியைப் பெற விரும்பும் நண்பரின் பெயரைத் தெரிவு செய்து அதன்
கீழுள்ள Invite this person லிங்கில் க்ளிக் செய்தல் வேண்டும். அப்போது உங்கள்
நண்பர் உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பைப் பார்வையிட அனுமதிக்கும். நண்பர் உங்கள்
கணினியை முழுமையாகத் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர Take control பட்டனில்
க்ளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் ஓகே க்ளிக் செய்து அவரை உள்ளே வர அனுமதிக்க
வேண்டும்.




 தொகுப்பு -- kulam

No comments:

Post a Comment