Wednesday, March 10, 2010

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?


  






எப்பொழுதுமே
நமது கணினியானது Hard Disk ( வன் வட்டு ) இன் உதவியில் boot ஆகி இயங்க
ஆரம்பிக்கும்.
Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.



ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy,CD,DVD வாயிலாக boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து
தீர்வைத் தேடலாம்.

ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting நினைவகங்களோ
இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் USB கருவிகள் கண்டிப்பாக
இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு
இயங்குதளம்.

இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில்
இருந்தபடி boot செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

கோப்பு
இங்கே

WinRar கொண்டு இதை விரித்தெடுத்தபிறகு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து
அதன்படி செயல்படவும்..



தொகுப்பு -- kulam

No comments:

Post a Comment