என்னிடம் அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று "எப்படி சார் மைக்ரோசாப்ட் Word டாக்குமென்டில் தமிழில் எழுதறது? தமிழில் எழுதினாலோ அல்லது வேறெங்காவதிருந்து
காப்பி பேஸ்ட் பண்ணிணாலோ ஒரு மாதிரி எழுத்துக்கள் கட்டம் கட்டமாய்
வருகின்றதே.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்பதாகும்."
சமீபத்தில் இது பற்றி
நண்பர் என்னிடம் விசாரித்திருந்தார்.
"வணக்கம், விகடனில்
தற்போது UNICODE முறையில் மாற்றம் செய்துள்ளனர். அதனால் தற்சமயம் கட்டுரைகளை MSWORD ல் COPY செய்தால் சரியாக தெரியவில்லை. Find the Attachment File and Give me the Solutions."
மேலே படத்தில் நீங்கள் காண்பது போல தமிழ் எழுத்துக்கள் Microsoft Office Word-ல் அவருக்கு கட்டம் கட்டமாய் தெரிந்தது.உங்களுக்கும் இதே
பிரச்சனை இருந்தால் இதோ தீர்வு.
இங்கு உங்களுக்கு தேவை மைக்ரோசாப்டின் இலவச
மென்பொருளான
Tamil Indic IME.இதை நீங்கள் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம்
செய்து கொள்ளலாம்.இதை நிறுவியவுடன் தமிழ் தமிழாய் Office Word-ல் உங்களுக்கு
தெரிந்து உங்களை நிச்சயம் களிப்பூட்டும்.
Download Tamil Indic IME
இந்த மென்பொருளின் இன்னொரு சிறப்பு இது தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழ் விசைபலகைகள்
தாம்.
இம்மென்பொருள்
Tamil Transliteration
Tamil 99 Keyboard
Inscript Keyboard
போன்ற மூவகை கீபோர்டுகளை கொண்டுள்ளது.
அதை நீங்கள் பெற
கீழ்கண்டதை செய்ய வேண்டும்.
Click Start->Settings-> Control Panel->Regional and Language Options-> Languages-> Details-> Add-> Tamil
மேற்கண்ட படியை நீங்கள் செய்து முடித்ததும் படத்தில் நீங்கள் காண்பது போல் உங்கள்
மானிட்டரின் வலதுகீழ் பகுதியில் EN-English அல்லது TA-Tamil ஒரு தெரிவு
இருக்கும். அதில் தமிழை தெரிவு செய்ததும் கீழே படத்தில் காண்பது போல் ஒரு மினி
கீபொர்டு படம்
அதை கிளிக்கி மேல்மூன்றில் ஒரு தமிழ் கீபோர்டை தெரிவுசெய்து கொள்ளலாம். தமிழில்
டைப்பி மகிழலாம்.
Tamil 99 Keyboard மற்றும் In script Keyboard
போன்றவை
ஆன்ஸ்கிரீன் கீபோர்டும் இங்கு கொண்டுள்ளது
தொகுப்பு -- kulam
No comments:
Post a Comment